பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் தங்கள் கிராம பகுதிக்கு தெருவிளக்கு அமைத்து கொடுத்த அரசுப் பள்ளி.
மாணவர் சேர்க்கைக்காக எங்கள் கிராமத்தின் ஒரு பகுதியான,பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு நானும் சக ஆசிரியர் Kalai Vannan அவர்களும் சென்றிருந்தோம்..அவர்களிடம் உரையாடும் போது அவர்கள் வாழும் பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடப்பதாகவும்,அதை பயன்படுத்தி கால்நடைகள் திருடு போவதாகவும் மிகவும் வருத்தப்பட்டனர்..
இது பற்றி எங்கள் பள்ளியின் Pums Vadasiruvalur Olakkur Vpm த ஆ மற்றும் ஆசிரியர்களுடன் விவாதித்தோம்.
"மிக ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளி ஆண்டு விழா என்றதும் மேடை அமைப்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியவர்களின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும்" என்று முடிவு செய்தோம்..
அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் கலைவாணன்அவர்களின் உதவியுடன் ரூ.3000 மதிப்புள்ள தெருவிளக்குக்கான 4 பெரிய LED பல்புகள் மற்றும் ஒயர்கள்,சுவிட்சுகள் வாங்கினோம்..
மேலும் எங்கள் பள்ளியின் சார்பாக பள்ளியின் த ஆ அப்பொருட்களை அப்பகுதி மக்களிடம் வழங்கினார்..
இன்று எங்களின் பள்ளி செலவிலேயே அவ்விளக்குகள் பொருத்தப்பட்டன..
அப்பகுதி மக்களுடன் எம் பள்ளி மாணவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்..
சரியான குடியிருப்புகள் இல்லாத நிலையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக ஒரு படிப்பகம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்..முயற்சி செய்கிறோம் என்று கூறி விடைபெற்றோம்..