வெள்ளி, 13 மே, 2016

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

ஊ ஒ ஆ பள்ளி வடசிறுவளூர்.ஒலக்கூர் ஒன்றியம்.எம் பள்ளியில் 12.06.2015 அன்று 


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப் பட்டது.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரவி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்,.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார்,.ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,செல்லப்பன்,கோபாலகிருஷ்ணன், குமார் ஆகியோர் உரையாற்றினார்.. பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..

3 Attachments

பள்ளி ஆண்டு விழா








கற்றல் நிகழ்வுகள்











சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள்







ஆண்டு விழா நாடகம்..


மாணவர்களின் செயல் திட்டங்கள்


மாணவர்களின் செயல் திட்டங்கள்


ஆசிரியர் நண்பர்களுடன் இணைந்து வெள்ளநிவாரண பணீயில் ஏடுபட்ட போது..

விழுப்புரம் மாவட்டம்,ஒலக்கூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக கடந்த திங்களன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதிகளில் உள்ள பள்ளிமாணவர்களுக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டது..

ஒலக்கூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய மற்றும் நிதி உதவி  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒருங்கினைந்து "மாணவர்  நலன் ஆசிரியர்கள் இயக்கம்" என்ற அமைப்பின் மூலம்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரக்காணம்,மற்றும் அதனை சுற்றியுள்ள தாழங்காடு,திருக்கனூர்,எக்கியர்குப்பம்,புதுப்பாக்கம்,வசவன்குப்பம்,கைப்பானிகுப்பம்,மண்டவாய்புதுக்குப்பம்,கழிக்குப்பம்,முன்னூர்,மேல்பாக்கம் உண்டுஉரைவிடப்பள்ளி என பத்திற்க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற பள்ளிகளில் பயிலும் சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட  மாணவர்கள் பயன் பெறும் வகையில்  நோட்டுபுத்தகங்கள்,எழுதுபொருட்கள், தட்டுகள்,உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது..மேலும் முன்னூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அரிசி,பாய்,போர்வை,பாத்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது...











கலாம் ஐயாவின் பிறந்த நாளுக்காக நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய video song











விழுப்புரம் மாவட்டம் ,ஒலக்கூர் ஒன்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் திரு APJ அப்துல்கலாம் அவர்களின் கனவுகள் தொடர்பான வீடியோ பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்..திரு கலாம் அவர்களின் விருப்பங்களாக நமக்கு எடுத்துரைத்த கனவு இந்தியா 2020,அறிவியல் தொழில்நுட்பம்,தேசப் பாதுகாப்பு,விவசாயம்,வீட்டிற்க்கு ஒரு நூலகம்,குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,அமைதி,நட்புணர்வு,சமாதானம் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு,குறிப்பாக  மாணவ சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும்வண்ணம் இந்த குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.திரு கலாம் விட்டுசென்ற பணியை ஆசிரிய சமூகத்தின்  துணையோடு மாணவ சமூகம் தொடர இக்குறுந்தகடு ஊக்கமளிக்கும்  வகையில் ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களின் உந்து சக்தியாக விளங்கிய திரு கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று , இக்குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
Attachments area


















EASY MATHS குழு மூலம் எளிய முறையில் கணித்ம் கற்றல்

ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் விடுதலை கல்வி அறக்கட்டளை சார்பாக (maths made easy)எளிமையான வழியில் கணிதம் கற்றல் பயிற்சி நடைபெற்றது.தலைமை ஆசிரியர் திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார்.அறக்கட்டளையின் செயளாலர் திரு சுரேஷ் அவர்கள் கணித பாடத்தின் மேல் உள்ள பயத்தை எவ்வாறு போக்குவது என்பதையும்,கணிதத்தை எவ்வாறு எளிமையாக கையாள்வது என்பது பற்றியும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்தார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரேவதி, ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,செல்லப்பன்,கோபாலகிருஷ்ணன்,குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.வெள்ளிமேடு பள்ளியின் ஆசிரியர் திரு மூர்த்தி அவர்கள் நன்றி கூறினார்..
3 Attachments






















சுட்டிவிகடன் இதழில் எம் மாணவர்களின் செயல்பாடு




அப்துல் கலாம் ஐயாவிற்க்கு எம் மாணவர்களின் அஞ்சலி


அப்துல் கலாம் ஐயாவிற்க்கு   அஞ்சலி செலுத்தும் விதமாக எம் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்






ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டது.. நிகழ்ச்சியில் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரவி,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு மலரஞ்சலி செலுத்தி ஊர்வலம் வந்தனர்.ஊர்வலத்தின் இறுதியில் அவரது நினைவாக மரக்கன்றுகள் நட்ப்பட்டது..நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரேவதி, ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,செல்லப்பன்,கோபாலகிருஷ்ணன்,குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்...