புதன், 12 செப்டம்பர், 2018

வடசிறுவளூர் அரசு பள்ளிக்கு தமிழக அரசின் தூய்மை பள்ளி விருது வழங்கப்பட்டது..

பள்ளிச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் சூற்றுப்புறம்,வகுப்பறை தூய்மை,சுத்தமான கழிப்பறை வசதி,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,மாணவர்களின் தன்சுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவற்றை குழுக்கள் மூலம்  ஆய்வு செய்து ,அவர்கள் அளிக்கும் மதிப்பெண்கள் மூலம் சிறந்த பள்ளிகள் விருதுக்கு  தேர்வு செய்யப்படுகிறது.அதடிப்படையில் 2017-18 ஆம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதிலிமிருந்து போட்டியில் கலந்து கொண்ட  ஐம்பத்தாராயிரம் பள்ளிகளில்  சிறந்த 40 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 5 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளில் ஒன்றான ஒலக்கூர் ஒனறியம் வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் த ஆ திருமதி பத்மாவதி மற்றும் அப்பள்ளியின் மாணவி நிவேதா ஆகியோர் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கையால் விருது மற்றும்   பரிசுத்தொகை முப்பதாயிரம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர். அமைச்சர் பெருமக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..
விருது பெற உழைத்த பள்ளியின் த ஆ  ,ஆசிரியர்கள் ,துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாணவர்களை மாவட்ட கல்வி அதிகாரகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்

ஞாயிறு, 18 ஜூன், 2017

பள்ளியின் சார்பாக கிராம பகுதிக்கு உதவி

பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் தங்கள் கிராம பகுதிக்கு தெருவிளக்கு அமைத்து கொடுத்த அரசுப் பள்ளி.

மாணவர் சேர்க்கைக்காக  எங்கள் கிராமத்தின் ஒரு பகுதியான,பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு நானும் சக ஆசிரியர் Kalai Vannan அவர்களும் சென்றிருந்தோம்..அவர்களிடம் உரையாடும்  போது அவர்கள் வாழும் பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடப்பதாகவும்,அதை பயன்படுத்தி கால்நடைகள் திருடு போவதாகவும் மிகவும் வருத்தப்பட்டனர்..
இது பற்றி எங்கள் பள்ளியின் Pums Vadasiruvalur Olakkur Vpm த ஆ மற்றும் ஆசிரியர்களுடன் விவாதித்தோம்.

 "மிக ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளி ஆண்டு விழா என்றதும் மேடை அமைப்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியவர்களின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும்" என்று முடிவு செய்தோம்..

 அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்  கலைவாணன்அவர்களின் உதவியுடன் ரூ.3000 மதிப்புள்ள தெருவிளக்குக்கான  4 பெரிய LED பல்புகள் மற்றும் ஒயர்கள்,சுவிட்சுகள் வாங்கினோம்..
மேலும் எங்கள் பள்ளியின் சார்பாக பள்ளியின் த ஆ அப்பொருட்களை அப்பகுதி மக்களிடம் வழங்கினார்..
இன்று எங்களின் பள்ளி செலவிலேயே அவ்விளக்குகள் பொருத்தப்பட்டன..
அப்பகுதி மக்களுடன் எம் பள்ளி மாணவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்..
சரியான குடியிருப்புகள் இல்லாத நிலையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக ஒரு படிப்பகம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்..முயற்சி செய்கிறோம் என்று கூறி விடைபெற்றோம்..

THE NEW INDIAN EXPRESS,ஹிந்து,தினதந்தி

THE NEW INDIAN EXPRESS,ஹிந்து,தினதந்தி  நாளிதழ்களில் நமது பள்ளி செய்தி

தினமலரில் நம் பள்ளி செய்தி


விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழா மற்றும் கல்விச் சீர் வழங்கும் விழா பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக  இன்று நடைபெற்றது..

விழாவில் கிராமத்தில் 5 வயது நிரம்பிய 26  மழலையர்களையும் ஒரே நாளில் பள்ளியில் சேர்த்தனர்.இதன் மூலம் 100% சதவீத சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.விழாவை கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை துவக்கி வைத்தார்.வட்டார வள மேற்பார்வையாளர் சங்கர் அவர்கள் மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளி சீருடையை வழங்கினார்....தலைமை ஆசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்..கிராம மக்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்..நிறைவாக திருமதி ரேவதி அவர்கள் நன்றி கூறினார்..

ன் சேர்க்கை விளம்பர பேனர்

நமது பள்ளியின் சேர்க்கை விளம்பர பேனர்