புதன், 12 செப்டம்பர், 2018

வடசிறுவளூர் அரசு பள்ளிக்கு தமிழக அரசின் தூய்மை பள்ளி விருது வழங்கப்பட்டது..

பள்ளிச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் சூற்றுப்புறம்,வகுப்பறை தூய்மை,சுத்தமான கழிப்பறை வசதி,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,மாணவர்களின் தன்சுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவற்றை குழுக்கள் மூலம்  ஆய்வு செய்து ,அவர்கள் அளிக்கும் மதிப்பெண்கள் மூலம் சிறந்த பள்ளிகள் விருதுக்கு  தேர்வு செய்யப்படுகிறது.அதடிப்படையில் 2017-18 ஆம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதிலிமிருந்து போட்டியில் கலந்து கொண்ட  ஐம்பத்தாராயிரம் பள்ளிகளில்  சிறந்த 40 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 5 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளில் ஒன்றான ஒலக்கூர் ஒனறியம் வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் த ஆ திருமதி பத்மாவதி மற்றும் அப்பள்ளியின் மாணவி நிவேதா ஆகியோர் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கையால் விருது மற்றும்   பரிசுத்தொகை முப்பதாயிரம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர். அமைச்சர் பெருமக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..
விருது பெற உழைத்த பள்ளியின் த ஆ  ,ஆசிரியர்கள் ,துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாணவர்களை மாவட்ட கல்வி அதிகாரகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக