திங்கள், 13 ஜூன், 2016

தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளி  சார்பில் 13.06.2016 அனறு தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி  கிராமத்தின் வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறும், தீவிர மாணவர் சேர்க்கை குறித்த வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தவாறும் மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..
பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

ஊ ஒ ஆ பள்ளி வடசிறுவளூர்.ஒலக்கூர் ஒன்றியம்.எம் பள்ளியில் 10.06.2016 அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப் பட்டது.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரவி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்,.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார்,.ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன்,  கலைவாணன்,





குமார் ஆகியோர் உரையாற்றினார்.. பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..

சனி, 4 ஜூன், 2016

DIGITIZATION OF TEXT BOOK பயிற்சி

STATE COUNCIL OF EDUCATION RESEARCH AND TRAINING(SCERT) சார்பாக திருச்சியில் நடைபெற்ற பாடப்புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கும் பயிற்சியில் தமிழகத்தில் இருந்து 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..எம் பள்ளி ஆசிரியரும் அதில் ஒருவர்..





மைசூரில் கணித பயிற்சி

 Regional institute of Education Mysore ல் நடந்த கணிதம் தொடர்பான பயிற்சியில் தமிழகத்தில் இருந்து 8 கணித ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்...அதில் எம் பள்ளியியில் இருந்து கணித ஆசிரியர் கலந்து கொண்டார்.அங்கு GEOGEBRA ,EXE போன்ற மொன்பொருட்களை கொண்டு கணிதம் கற்ப்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது..