திங்கள், 13 ஜூன், 2016

தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளி  சார்பில் 13.06.2016 அனறு தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி  கிராமத்தின் வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறும், தீவிர மாணவர் சேர்க்கை குறித்த வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தவாறும் மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..
பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக