வெள்ளி, 13 மே, 2016

கற்றல் நிகழ்வுகள்











சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள்







ஆண்டு விழா நாடகம்..


மாணவர்களின் செயல் திட்டங்கள்


மாணவர்களின் செயல் திட்டங்கள்


ஆசிரியர் நண்பர்களுடன் இணைந்து வெள்ளநிவாரண பணீயில் ஏடுபட்ட போது..

விழுப்புரம் மாவட்டம்,ஒலக்கூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக கடந்த திங்களன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதிகளில் உள்ள பள்ளிமாணவர்களுக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டது..

ஒலக்கூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய மற்றும் நிதி உதவி  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒருங்கினைந்து "மாணவர்  நலன் ஆசிரியர்கள் இயக்கம்" என்ற அமைப்பின் மூலம்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரக்காணம்,மற்றும் அதனை சுற்றியுள்ள தாழங்காடு,திருக்கனூர்,எக்கியர்குப்பம்,புதுப்பாக்கம்,வசவன்குப்பம்,கைப்பானிகுப்பம்,மண்டவாய்புதுக்குப்பம்,கழிக்குப்பம்,முன்னூர்,மேல்பாக்கம் உண்டுஉரைவிடப்பள்ளி என பத்திற்க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற பள்ளிகளில் பயிலும் சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட  மாணவர்கள் பயன் பெறும் வகையில்  நோட்டுபுத்தகங்கள்,எழுதுபொருட்கள், தட்டுகள்,உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது..மேலும் முன்னூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அரிசி,பாய்,போர்வை,பாத்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது...











கலாம் ஐயாவின் பிறந்த நாளுக்காக நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய video song











விழுப்புரம் மாவட்டம் ,ஒலக்கூர் ஒன்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் திரு APJ அப்துல்கலாம் அவர்களின் கனவுகள் தொடர்பான வீடியோ பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்..திரு கலாம் அவர்களின் விருப்பங்களாக நமக்கு எடுத்துரைத்த கனவு இந்தியா 2020,அறிவியல் தொழில்நுட்பம்,தேசப் பாதுகாப்பு,விவசாயம்,வீட்டிற்க்கு ஒரு நூலகம்,குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,அமைதி,நட்புணர்வு,சமாதானம் போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு,குறிப்பாக  மாணவ சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும்வண்ணம் இந்த குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது.திரு கலாம் விட்டுசென்ற பணியை ஆசிரிய சமூகத்தின்  துணையோடு மாணவ சமூகம் தொடர இக்குறுந்தகடு ஊக்கமளிக்கும்  வகையில் ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.இளைஞர்களின் உந்து சக்தியாக விளங்கிய திரு கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று , இக்குறுந்தகடு வெளியிடப்படுகிறது.
Attachments area