செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சுதந்திர தினவிழா 2016

வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா

திண்டிவனம்,வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. .பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.  கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் சிறப்புவிருந்தினராக  கலந்து கொண்டார்.ஆசிரியப் பயிற்றுநர் திருமதி சாய்தா பீவி சுதந்திர தின உரையாற்றினார்.அதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது .ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..

பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..











சனி, 30 ஜூலை, 2016

Inspire award அறிவியல் கண்காட்சி



மாணவர்களின் லட்சிய கனவுகளை தாங்கிய கனவு மரம்

திண்டிவனம்,
வடசிறுவளூர் பள்ளியில்  மாணவர்களின் இலட்சிய கனவுகளை தாங்கிய கனவு மரம் உருவாக்கப்பட்டது.

 திண்டிவனம்,ஒலக்கூர் ஒனறியம்,
வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் முன்னாள் குடியயசுத் தலைவர் திரு A P  J அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது..
மாணவர்கள்  கலாம் அவர்களின் புகைப்படம் அடங்கிய தாளில் தங்களின் கனவுகளை எழுதி மரத்தில் தொங்கவிட்டனர். தலைமை  ஆசிரியை , ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள்  கலாம் அவர்களின் உருவ படத்திற்க்கு மெழுகுவன்த்தி ஏந்தியும் ,மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.இறுதியில் அனைவரும் கலாமின் உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.




திங்கள், 13 ஜூன், 2016

தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளி  சார்பில் 13.06.2016 அனறு தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி  கிராமத்தின் வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. தீவிர மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறும், தீவிர மாணவர் சேர்க்கை குறித்த வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வினியோகித்தவாறும் மாணவ, மாணவியர் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..
பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..


குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

ஊ ஒ ஆ பள்ளி வடசிறுவளூர்.ஒலக்கூர் ஒன்றியம்.எம் பள்ளியில் 10.06.2016 அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கொண்டாடப் பட்டது.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரவி ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்,.பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார்,.ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன்,  கலைவாணன்,





குமார் ஆகியோர் உரையாற்றினார்.. பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..

சனி, 4 ஜூன், 2016

DIGITIZATION OF TEXT BOOK பயிற்சி

STATE COUNCIL OF EDUCATION RESEARCH AND TRAINING(SCERT) சார்பாக திருச்சியில் நடைபெற்ற பாடப்புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கும் பயிற்சியில் தமிழகத்தில் இருந்து 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்..எம் பள்ளி ஆசிரியரும் அதில் ஒருவர்..





மைசூரில் கணித பயிற்சி

 Regional institute of Education Mysore ல் நடந்த கணிதம் தொடர்பான பயிற்சியில் தமிழகத்தில் இருந்து 8 கணித ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்...அதில் எம் பள்ளியியில் இருந்து கணித ஆசிரியர் கலந்து கொண்டார்.அங்கு GEOGEBRA ,EXE போன்ற மொன்பொருட்களை கொண்டு கணிதம் கற்ப்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது..