சனி, 10 டிசம்பர், 2016

திண்டிவனம்,ஒலக்கூர் ஒன்றியம் வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இரங்கல் கூட்டத்திற்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் முன்னிலை வகித்தார்.மறைந்த முதல்வர் அவர்களின் உருவப்படத்தை தாங்கி மாணவ மாணவிகள் மௌன ஊர்வலம் வந்தனர்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மறைந்த முதல்வரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.ஆசிரியர்கள் திருமதி ரேவதி,கலைவாணன், ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,,சங்கர்,குமார் ஆகியோர் இரங்கல் உரையாறறினர்.
Dfc I CAN AWARDS 2016 ல் தேசிய அளவில் எங்கள் பள்ளி மாணவர்கள் TOP 20 க்குள் இடம்பெற்று விருதுபெற்றனர்..விருது விழா குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்றது

திங்கள், 14 நவம்பர், 2016

குழந்தைகள் தினவிழா அன்று எம் மாணவர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எங்கள் தலைமை ஆசிரியை அவர்களின் விருப்பத்திற்கேற்ப கிராமியக்கலை பயிற்சி எம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது..
சகோ Stalin Arockia Raj அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் Antony raj அவர்களின் பயிற்சியில் எம் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தனர்..தங்கள் பள்ளியின் கலை பொருட்களை எம் பள்ளிக்கு கொடுத்து உதவிய Stalin Arockia Raj அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..
நண்பர்களுக்கு இனிப்பான செய்தி ...எங்கள் பள்ளி இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் DFC விருதை பெற்றுள்ளது..இந்தியா முழுதும் உள்ள 3500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தற்போது நிலவரப்படி சிறந்த 100 படைப்புகளுள் ஒன்றாக தேர்வாகி உள்ளது...இதற்காக விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் டிசம்பர் 3,4 ல் நடைபெற உள்ளது.
நீண்ட நாள் கனவான PUPPET SHOW கனவு இன்று நிறைவேறியது.பல சிரமங்களுக்கு மத்தியில் நண்பர்கள் உதவியோடு 6000 மதிப்புள்ள பொம்மைகள் மற்றும் திரைகள்  வாங்கினோம்.இன்றைய CRC யில் எம் பள்ளி மாணவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது..

ஒரு CRC அல்ல.மொத்தம் 5 CRC மையங்களில் நிகழ்த்தி காட்டியள்ளார்கள்..
நிகழ்ச்சிக்கு வழிகாட்டிய  தோழர் Thomas Antonyஅவர்களுக்கும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நண்பர் Kala vannan அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்..அனைத்து தரப்பு ஆசிரியர்களும் வியந்து பாராட்டினர்..பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து எம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி
*மட்டற்ற மகிழ்ச்சி
*thank u Jaya Venkat sir..
நண்பர்களிடம் உதவிக்காக பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன்..ஆனால் இது வேற லெவல்..நேற்று கேட்டு இன்றே கிடைத்த உதவி இது..
அதுவும் மிகவும் பயனுள்ள உதவி..இந்த Dictionary கள் ஆங்கில மொழித் திறனில் எம்மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை..எம் பள்ளியின் சார்பாகவும் எம் மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இத்தகைய நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்தி,இந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த Rajesh Narasimman அவர்களுக்கு நன்றி.


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சுதந்திர தினவிழா 2016

வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா

திண்டிவனம்,வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. .பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.  கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் சிறப்புவிருந்தினராக  கலந்து கொண்டார்.ஆசிரியப் பயிற்றுநர் திருமதி சாய்தா பீவி சுதந்திர தின உரையாற்றினார்.அதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது .ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..

பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..