புதன், 12 செப்டம்பர், 2018

வடசிறுவளூர் அரசு பள்ளிக்கு தமிழக அரசின் தூய்மை பள்ளி விருது வழங்கப்பட்டது..

பள்ளிச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் சூற்றுப்புறம்,வகுப்பறை தூய்மை,சுத்தமான கழிப்பறை வசதி,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,மாணவர்களின் தன்சுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவற்றை குழுக்கள் மூலம்  ஆய்வு செய்து ,அவர்கள் அளிக்கும் மதிப்பெண்கள் மூலம் சிறந்த பள்ளிகள் விருதுக்கு  தேர்வு செய்யப்படுகிறது.அதடிப்படையில் 2017-18 ஆம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதிலிமிருந்து போட்டியில் கலந்து கொண்ட  ஐம்பத்தாராயிரம் பள்ளிகளில்  சிறந்த 40 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 5 அன்று முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளில் ஒன்றான ஒலக்கூர் ஒனறியம் வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் த ஆ திருமதி பத்மாவதி மற்றும் அப்பள்ளியின் மாணவி நிவேதா ஆகியோர் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கையால் விருது மற்றும்   பரிசுத்தொகை முப்பதாயிரம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர். அமைச்சர் பெருமக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..
விருது பெற உழைத்த பள்ளியின் த ஆ  ,ஆசிரியர்கள் ,துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாணவர்களை மாவட்ட கல்வி அதிகாரகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்

ஞாயிறு, 18 ஜூன், 2017

பள்ளியின் சார்பாக கிராம பகுதிக்கு உதவி

பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் தங்கள் கிராம பகுதிக்கு தெருவிளக்கு அமைத்து கொடுத்த அரசுப் பள்ளி.

மாணவர் சேர்க்கைக்காக  எங்கள் கிராமத்தின் ஒரு பகுதியான,பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு நானும் சக ஆசிரியர் Kalai Vannan அவர்களும் சென்றிருந்தோம்..அவர்களிடம் உரையாடும்  போது அவர்கள் வாழும் பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடப்பதாகவும்,அதை பயன்படுத்தி கால்நடைகள் திருடு போவதாகவும் மிகவும் வருத்தப்பட்டனர்..
இது பற்றி எங்கள் பள்ளியின் Pums Vadasiruvalur Olakkur Vpm த ஆ மற்றும் ஆசிரியர்களுடன் விவாதித்தோம்.

 "மிக ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளி ஆண்டு விழா என்றதும் மேடை அமைப்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியவர்களின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும்" என்று முடிவு செய்தோம்..

 அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்  கலைவாணன்அவர்களின் உதவியுடன் ரூ.3000 மதிப்புள்ள தெருவிளக்குக்கான  4 பெரிய LED பல்புகள் மற்றும் ஒயர்கள்,சுவிட்சுகள் வாங்கினோம்..
மேலும் எங்கள் பள்ளியின் சார்பாக பள்ளியின் த ஆ அப்பொருட்களை அப்பகுதி மக்களிடம் வழங்கினார்..
இன்று எங்களின் பள்ளி செலவிலேயே அவ்விளக்குகள் பொருத்தப்பட்டன..
அப்பகுதி மக்களுடன் எம் பள்ளி மாணவர்களும் மிகவும் மகிழ்ந்தனர்..
சரியான குடியிருப்புகள் இல்லாத நிலையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக ஒரு படிப்பகம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்..முயற்சி செய்கிறோம் என்று கூறி விடைபெற்றோம்..

THE NEW INDIAN EXPRESS,ஹிந்து,தினதந்தி

THE NEW INDIAN EXPRESS,ஹிந்து,தினதந்தி  நாளிதழ்களில் நமது பள்ளி செய்தி

தினமலரில் நம் பள்ளி செய்தி


விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழா மற்றும் கல்விச் சீர் வழங்கும் விழா பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக  இன்று நடைபெற்றது..

விழாவில் கிராமத்தில் 5 வயது நிரம்பிய 26  மழலையர்களையும் ஒரே நாளில் பள்ளியில் சேர்த்தனர்.இதன் மூலம் 100% சதவீத சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.விழாவை கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை துவக்கி வைத்தார்.வட்டார வள மேற்பார்வையாளர் சங்கர் அவர்கள் மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளி சீருடையை வழங்கினார்....தலைமை ஆசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்..கிராம மக்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்..நிறைவாக திருமதி ரேவதி அவர்கள் நன்றி கூறினார்..

ன் சேர்க்கை விளம்பர பேனர்

நமது பள்ளியின் சேர்க்கை விளம்பர பேனர்

புதன், 24 மே, 2017

பள்ளியின் முன்னாள் மாணவன் 10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண்



எங்கள் பள்ளியில் 8ஆம் வகுப்புவரை படித்து தற்போது வெள்ளிமேடுபேட்டை அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் குமரேசன் என்ற மாணவன் 10 ஆம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் இடத்தை பெற்றுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அம்மாணவனை எங்கள் பள்ளியின் த ஆ பரிசளித்து பாராட்டினார்.

சனி, 20 மே, 2017

அறிவியல் கண்காட்சியில் ஒட்டுமொத்த சிறந்த பள்ளிக்கான

வட்டார வள மைய அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ஒட்டுமொத்த  சிறந்த பள்ளிக்கான விருதையும் ,முதல் பரிசையும் எம் பள்ளியின் த ஆ அவர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளரிடம் பெற்றார்..

சனி, 13 மே, 2017

எங்கள் பள்ளியின் Pums Vadasiruvalur Olakkur Vpm P. வெங்கடேசன் மற்றும் M. அலக்ஸ் ஆகிய இரு மாணவர்கள் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

National Means-cum-Merit Scholarship Scheme examination for class VIII எனப்படும் தேசிய திறனாய்வு  தேர்வில் எங்கள் ஒன்றியத்தில்  அரசுப் பள்ளிகளில் எங்கள் பள்ளியில்  மட்டும்தான் இருமாணவர்கள் தேர்வாகியுள்ளனர்..இவர்களுக்கு அரசு சார்பாக  12  வகுப்பு வரை மாதந்தோறும்  ₹500 வழங்கப்படும்..

வியாழன், 2 மார்ச், 2017

தேசிய அறிவியல் தினம்

பிப்ரவரி 28

எங்கள் Pums Vadasiruvalur Olakkur Vpm பள்ளியல் தேசிய அறிவியல் தினம்  கொண்டாடப்பட்டது..மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் ஒன்றியத்தின் ஆசிரிய பயிற்றுநர் திரு Ganapathi Chandru,
அறிவியல் இயக்கத்தின்  செயலாளர் திரு Anand raj  தலைவர் திரு KJL ராஜா  ஆகியோர் அறிவியல் தொடர்பான பல அரிய கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்..

சனி, 7 ஜனவரி, 2017

மேன்மை மிக்கவர்களிடம் இருந்து அழகான உதவி...
இலண்டன் வாழ் தமிழர்களின் அமைப்பான அறிவொளி வளையம் சார்பாக அதன் தொண்டரும , கற்க கசடற கற்பிக்க நூலின் ஆசிரியருமான திருமதி மு.கனகலட்சுமி அவர்களால் எங்கள் பள்ளிக்கு கிடைத்த உதவி..
கடல் கடந்து வாழும் தமிழர்கள் எங்களின் ஏழை பிள்ளைகள் வசதியாக படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 12 வட்ட மேசைகளையும் ,60 நாற்காலிகளையும் கொடுத்து உதவியுள்ளார்கள்.உதவிய மேன்மைமிக்கவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிறாத்திக்கிறோம்..thank  u madam..

சனி, 10 டிசம்பர், 2016

திண்டிவனம்,ஒலக்கூர் ஒன்றியம் வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இரங்கல் கூட்டத்திற்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் முன்னிலை வகித்தார்.மறைந்த முதல்வர் அவர்களின் உருவப்படத்தை தாங்கி மாணவ மாணவிகள் மௌன ஊர்வலம் வந்தனர்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மறைந்த முதல்வரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.ஆசிரியர்கள் திருமதி ரேவதி,கலைவாணன், ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,,சங்கர்,குமார் ஆகியோர் இரங்கல் உரையாறறினர்.
Dfc I CAN AWARDS 2016 ல் தேசிய அளவில் எங்கள் பள்ளி மாணவர்கள் TOP 20 க்குள் இடம்பெற்று விருதுபெற்றனர்..விருது விழா குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்றது

திங்கள், 14 நவம்பர், 2016

குழந்தைகள் தினவிழா அன்று எம் மாணவர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எங்கள் தலைமை ஆசிரியை அவர்களின் விருப்பத்திற்கேற்ப கிராமியக்கலை பயிற்சி எம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது..
சகோ Stalin Arockia Raj அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் Antony raj அவர்களின் பயிற்சியில் எம் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தனர்..தங்கள் பள்ளியின் கலை பொருட்களை எம் பள்ளிக்கு கொடுத்து உதவிய Stalin Arockia Raj அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..
நண்பர்களுக்கு இனிப்பான செய்தி ...எங்கள் பள்ளி இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் DFC விருதை பெற்றுள்ளது..இந்தியா முழுதும் உள்ள 3500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தற்போது நிலவரப்படி சிறந்த 100 படைப்புகளுள் ஒன்றாக தேர்வாகி உள்ளது...இதற்காக விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் டிசம்பர் 3,4 ல் நடைபெற உள்ளது.
நீண்ட நாள் கனவான PUPPET SHOW கனவு இன்று நிறைவேறியது.பல சிரமங்களுக்கு மத்தியில் நண்பர்கள் உதவியோடு 6000 மதிப்புள்ள பொம்மைகள் மற்றும் திரைகள்  வாங்கினோம்.இன்றைய CRC யில் எம் பள்ளி மாணவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது..

ஒரு CRC அல்ல.மொத்தம் 5 CRC மையங்களில் நிகழ்த்தி காட்டியள்ளார்கள்..
நிகழ்ச்சிக்கு வழிகாட்டிய  தோழர் Thomas Antonyஅவர்களுக்கும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நண்பர் Kala vannan அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்..அனைத்து தரப்பு ஆசிரியர்களும் வியந்து பாராட்டினர்..பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து எம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்ப அதிர்ச்சி
*மட்டற்ற மகிழ்ச்சி
*thank u Jaya Venkat sir..
நண்பர்களிடம் உதவிக்காக பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன்..ஆனால் இது வேற லெவல்..நேற்று கேட்டு இன்றே கிடைத்த உதவி இது..
அதுவும் மிகவும் பயனுள்ள உதவி..இந்த Dictionary கள் ஆங்கில மொழித் திறனில் எம்மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை..எம் பள்ளியின் சார்பாகவும் எம் மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இத்தகைய நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகப்படுத்தி,இந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த Rajesh Narasimman அவர்களுக்கு நன்றி.


செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சுதந்திர தினவிழா 2016

வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா

திண்டிவனம்,வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒலக்கூர் ஒன்றியம் ,வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. .பள்ளியின் தலைமையாசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் வரவேற்றார். ஊராட்சிமன்றத் தலைவர் திரு ரவி அவர்கள்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.  கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் சிறப்புவிருந்தினராக  கலந்து கொண்டார்.ஆசிரியப் பயிற்றுநர் திருமதி சாய்தா பீவி சுதந்திர தின உரையாற்றினார்.அதனை தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது .ஆசிரியர்கள் ராஜேஷ்,திருமால்,ஹீமாராணி பிரசன்னா,கோபாலகிருஷ்ணன், கலைவாணன்,குமார் ஆகியோர் பங்குபெற்றனர்..

பட்டதாரி ஆசிரியை திருமதி ரேவதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்..